கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திவரும் அணுஉலைக்கு
எதிரான மக்கள் இயக்கத்தினர், தற்போது மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல்
காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் தங்கள் போராட்டத்துக்கு
ஆதரவு கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக போராட்டக்குழு
தலைவர் உதயகுமார், மம்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாட்டின் சாதாரண
மக்களை காக்கவும், அவர்க்ளின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பேணவும்,
உங்களைப் போன்ற தலைவர்கள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என
எழுதப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளத்திற்கு வருகைதரும்படியும் அக்கடிதம்
மூலம் மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கடிதம்
தொடர்பாகப் பேசிய மம்தா, ‘நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள்,
வியாபாரிகள், சதாரண மக்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்க நான் இந்தியாவில்
எங்குவேண்டுமானாலும் செல்வேன். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த
எல்லை மீறப்படும்போது நான் மக்களுக்காக நிச்சயம் உழைப்பேன்’ என்றார்.
நல்லது நடக்கட்டும்
ReplyDeleteெஜயலலிதாட ெெெெெெசால்லிடாதிகடாதிடாதடாடசால்லில்லிதல்லில்லல்ல