எம்ஜிஆர் படங்களில் நடித்த ரேவதி என்ற பழைய நடிகை, அம்மாவின் கைப்பேசி படத்தில் முக்கிய
வேடத்தில் நடித்துள்ளார்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் சாந்தனு-இனியா ஜோடி நடித்துள்ள அம்மாவின் கைப்பேசி படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ், படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள ரேவதி,
எம்ஜிஆருடன் நடித்தவர்
என்பதைக் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், "எல்லோருக்குமே அம்மா பாசம் இருக்கும். எம்.ஜி.ஆர்.ரசிகர்களுக்கு
தாய்ப்பாசம் இன்னும் அதிகமாக இருக்கும். அவருடைய எல்லா படங்களிலும் தாய்ப்பாசத்துக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனால்தான் இந்த படத்தில், எம்.ஜி.ஆர். படத்தை முதலில் காட்டியிருக்கிறார் தங்கர்பச்சான்.
உலக சினிமாவில் தவிர்க்க முடியாதவர், தங்கர்பச்சான். `அம்மாவின் கைப்பேசி' நாவலை நான் படித்து இருக்கிறேன்.
இதில், அம்மா
கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார்? என்று கேட்டேன். ரேவதி என்றார்கள்.
இந்த ரேவதி, `காக்கும் கரங்கள்' படத்தில் நடித்தவர். `தனிப்பிறவி' படத்தில், எம்.ஜி.ஆரின் தங்கையாக வருவார். அவரை தேடிக்கண்டுபிடித்து நடிக்க
வைத்த தங்கர்பச்சானை பாராட்ட வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment