தமது மருமகன் ராபர்ட் வத்ரா மீதான புகாரை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி
மறுத்துள்ளார்.
சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வத்ரா மீது நீண்டகாலமாக பல "மர்ம"
புகார்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அவர் என்ன தொழில் செய்து வருகிறார் என்பதே மர்மம்
என்கிற அளவுக்கு இந்த புகார் பலமானது. இந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும்
பிரசாந்த் பூஷன் ஆகியோர் நேற்று அதிரடியாக ஒரு புகாரைக் கூறினர். "டி.எல்.எப்.
என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், வத்ராவுக்கு ரூ.65 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கியதாகவும்,
ரூ.300 கோடி மதிப்புள்ள
நிலங்களை ரூ.5 கோடிக்கு வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் ஆளும் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் அரியானா
ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து நில ஒதுக்கீடு பெற்றதாகவும் கூறியிருந்தனர்.
ஆனால் தமது மகன் மீதான இந்த புகாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து இருக்கிறார்.
``வத்ரா வர்த்தகம்
செய்து வருகிறார். அவர் எந்த தவறோ அல்லது அதிகார துஷ்பிரயோகமோ செய்யவில்லை''
என்று கூறியிருக்கிறார்.
சோனியாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. சோனியாவின் மருமகனுக்கு
எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமாவை. இது தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட
வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று அக்கட்சியின் மூத்த
தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆமாம் அவங்க கஷ்டம் அவங்களுக்குத்தான் தெரியும்........நாளைக்கு பிரியங்கா..வாழாவெட்டியா வீட்டுக்கு வந்துட்டா யாருக்கு நஷ்டம்.....அதுமட்டுமில்லாம இந்த நாடே ராபர்ட்டோட மாமனார் சொத்துதானேப்பா...?????
ReplyDeleteஇந்த பூைனயும் பால் குடிக்குமா
ReplyDelete