அரசு நடவடிக்கை பாயும் முன் நித்யானந்தாவை நீக்கி மதுரை ஆதீனம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுமார் 1500 ஆண்டுகள் பழமையனது மதுரை ஆதீனமடம். திருஞான சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்ட இந்த மடத்தின் 292-வது ஆதீன மாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த மடத்துக்கு சுமார் 1400 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவை திடீரென மதுரை ஆதீனம் நியமித்தார். இந்த நியமனம் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ஆதீன மீட்பு குழு உருவாக்கப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. நித்யானந்தா நியமனத்தை வேறு மடாதிபதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தொடர்பாக கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன. நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்ட நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பதவியேற்றதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்பேன் என்று கூறியது பக்தர்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் முற்றுகை போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் நித்யானந்தா நியமனத்தை அருணகிரிநாதர் உறுதியாக ஆதரித்தார்.
சிவ பெருமானும், பார்வதியும் எனது கனவில் வந்து சொன்னதால் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தேன். அவருக்கு மொழி புலனும், பக்தியும் ஆட்கள் பலமும் உள்ளன. அவர்தான் மதுரை ஆதீனத்தை வழிநடத்தி செல்ல தகுதியானவர் என்றும் கூறி வந்தார். நாளுக்கு நாள் ஆதீன மடத்தில் நித்யானந்தாவின் கைகள் ஓங்கின. அவரது சீடர்கள் ஆதீனம் அருணகிரிநாதரின் போட்டோக்களை அப்புறப்படுத்திவிட்டு, நித்யானந்தா புகழ்பாட ஆரம்பித்தனர். அப்போது இருதரப்பு சீடர்களுக்கிடையே மோதல்களும் ஏற்பட்டன.
இந்த நிலையில் ஆதீன மடத்துக்குள் ஆபாச நடனம் நடைபெறுவதாகவும், புலி தோல் இருப்பதாகவும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி ஆதீன மடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் புலி தோல் சிக்காவிட்டாலும் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் நீதிமன்றத்திற்கும் தமிழக அரசிற்கும் போலீஸ் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அருணகிரிநாதர், நித்யானந்தா ஆகிய இருவரையும் நீக்கிவிட்டு, ஆதீன சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த மதுரை ஆதீன வழக்கில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நித்யானந்தாவின் நியமனம் செல்லாது என்றும், ஆதீன சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தை நீக்க மதுரை மாவட்ட முன்சீப் கோர்ட்டிலும், இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது. இதனால் ஆதீன மடத்தை அரசே ஏற்கப்போவதாக தகவல்கள் பரவின. இதனால் அருணகிரிநாதருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காலை அருணகிரிநாதர் நித்யானந்தாவை தொடர்பு கொண்டு அரசின் நடவடிக்கை தீவிரம டைந்துள்ள நிலையில் மதுரை ஆதீனத்தை பாதுகாக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவே நீங்கள் இளைய ஆதீன பட்டத்தில் இருந்து விலகி விடுங்கள் இதனை நீங்களே செய்தியாளர்களிடம் அறிவித்து விடும்படியும் கூறினார்.
திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தா இது தொடர்பாக தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக அருணகிரிநாதரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது வக்கீல்கள் கோர்ட்டில் வழக்குகள் உள்ள நிலையில் விலகுவது சரியாக இருக்காது என்று நித்யானந்தாவிடம் கூறியதை அடுத்து பதவி விலக நித்யானந்தா மறுத்துவிட்டார்.
நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல. நீங்கள் கொடுத்தது எனவே நீங்களே விருப்பப்பட்டால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அருணகிரிநாதரிடம் நித்யானந்தா கூறிவிட்டார். இந்த நிலையில்தான் நேற்று மாலை அருணகிரிநாதர் தனது வக்கீல்கள் மூலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனுவையும் அளித்து நித்யானந்தாவை நீக்கி விட்டதாகவும், அறிவித்தார். இதையடுத்து நித்யானந்தாவின் சீடர்களும், ஆதீன மடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் மடத்து முன்பு திரண்டனர். நித்யானந்தாவின் சீடர்கள் வெளியேறிய போது அவர்கள் உற்சாக கோஷமிட்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. நித்யானந்தா நீக்கத்தையடுத்து இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் ஆதீன மடத்தில் தேங்காய் உடைத்து விசேஷ பூஜை நடத்தி வருகிறார்கள்.
இதனால் சுமார் 6 மாதமாக மதுரை ஆதீனத்தில் ஏற்பட்ட நித்யானந்தா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment