டிவிட்டர், பேஸ்புக்கில் தன்னை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய பாடகி சின்மயி மீது இப்போது
குற்றச்சாட்டுகள் கொட்ட ஆரம்பித்திருக்கின்றன.
ப்ளாக், ட்விட்டர், பேஸ்புக் என சின்மயி கால்வைத்த இடமெல்லாம் சூடான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
'யாரும் தானாக முன்வந்து இவரை அவதூறாக எழுதுவதில்லை. மாறாக இவர் ஒரு விஷயத்தை எழுதப்
போய், அதற்கு
எதிர்வினையாக இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிய, ஒரு கட்டத்தில் அது ஆபாச கமெண்டுகளாக
மாறியிருக்கிறது,' என்பதுதான் இவரை நீண்ட காலமாக சமூகத் தளங்களில் கவனித்து வருபவர்கள் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் வக்கிரமாக சிலர் எழுதி வருவதாக
சில தினங்களுக்கு முன் போலீசில் புகார் கொடுத்தார் சின்மயி. உடனே சின்மயிக்கு ஆதரவாக
ஒரு கோஷ்டியே வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.
இந்தப் பெண் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சாதி துவேஷத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளதுதான்
இப்போது பலரையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
தனது ட்விட்டரில் 'நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை', என கூறியிருக்கிறார் சின்மயி என்பதுதான்
குற்றச்சாட்டு. இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள
மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதுமட்டுமில்லை.. "மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை
கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?"
என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.
ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானையே
குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர்
அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
திரைப்படங்களில் இனி சின்மயிக்கு எந்த வாய்ப்பையும் வழங்கக் கூடாது என வெளிப்படையான
போராட்டங்களை முன்னெடுக்கவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன.
No comments:
Post a Comment