T20 உலகக் கோப்பை சுப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி
1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு
பிறகும் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா. Net Runrate அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு
முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பில்டிங் தேர்வு செய்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை
இழந்து 152 ரன்கள் எடுத்தனர். இந்தியா அணியின் கம்பீர்
12 பந்துகளில் 8 ரன்களையும், சேவாக் 14 பந்துகளில் 17 ரன்களையும், ரோஹித் 27 பந்துகளில் 25 ரன்களையும், யுவராஜ் 15 பந்துகளில் 21 ரன்களையும்,ரைனா 34 பந்துகளில் 45 ரன்களையும், டோனி 13 பந்துகளில் 23 ரன்களையும் எடுத்து ஆட்டம்
இழக்காமல் இருந்துதனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் மோர்னி மோர்கல் 4
ஓவர்களில் 28 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்களையும், பீட்டர்சன் 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்
வீழ்த்தினர்.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு
களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும்
இழந்து 151 ரன்களை
எடுத்து தோல்வியுற்றது. தென்னாபிரிக்கா அணியின்
டு பிளேச்சிஸ் 38 பந்துகளில் 65 ரன்களும்,டி வில்லேர்ஸ் 13 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஜாகிர்கான் 4 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும்,யுவராஜ் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டையும்,பாலாஜி 3.5 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றிக்கு பிறகும் அரையிறுதிக்கான
வாய்ப்பை இழந்தது இந்தியா. Net Runrate அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
No comments:
Post a Comment