ஒரு படத்தின் வெற்றிக்கு நான்தான் காரணம் என்று எந்த ஹீரோவாவது சொன்னால் தலையில்
தட்ட வேண்டும், என்றார் இயக்குநர் கேவி ஆனந்த்.
சூர்யாவை வைத்து மாற்றான் என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.
படத்தின் அறிமுக பிரஸ் மீட் நேற்று நடந்தது. கேவி ஆனந்த் பேசும்போது, "ஒரு படம் சிறப்பாக வர நடிகர்
நடிகைகளைத் தாண்டி ஏராளமான தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால் படம்
ஜெயித்ததும் அதற்கு நான்தான் காரணம் என்று எந்த நடிகராவது சொன்னால் அவர்களின் தலையில்
தட்ட வேண்டும். இந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் படத்தின் வெற்றிக்கு உண்மையான காரணம்.
மாற்றான் படத்தில் பலரது உழைப்பு உள்ளது. பல ஆராய்ச்சிகள் செய்து விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம்.
சென்னையில் மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் இரண்டு சூர்யாக்களும் ஒட்டியிருப்பது
போல காட்டியிருக்கிறோம்," என்றார்.
கேவி ஆனந்த் பேச்சை எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்
சூர்யா.
இந்தப் படத்தில் மெசேஜ் சொல்லியிருப்பதாக கதாசிரியர்கள் இருவரும் சொன்னார்களே,
என்ன மெஸேஜ் அது?
என்று கேட்டபோது,
"மெஸேஜ் சொல்லும்
அளவுக்கு எனக்கு தகுதி வந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆனால் சமூகத்துக்கு தேவையான சில
விஷயங்களை மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன்," என்றார்.
No comments:
Post a Comment