மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் ரம்யா(வயது 25). எம்.எஸ்.சி.
பி.எட்., படித்துள்ள இவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள
பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்பொன்குமார் என்பவரும் கடந்த 5
ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
கார்த்திக் பொன்குமார் தற்போது சென்னையில் டி.எஸ்.பி. பயிற்சியில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்யாவை திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து ரம்யா கொடுத்துள்ள புகாரின் பேரில் திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், எந்த முடிவும் எட்டாததால் தனக்கு நீதி வேண்டும் என்று ரம்யா போராடி வருகிறார்.
இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
நேற்று முன்தினம் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் பொன்குமார் என்னை மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார். இதற்கு அவரது உறவினர் வெள்ளைச்சாமிதான் காரணம். அவரது தூண்டுதலின்பேரில் எனது காதல் நட்டாற்றில் நிற்கிறது.
ஆனால் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர். அப்படி ஒன்றும் கார்த்திக் பொன்குமார் எழுத்து பூர்வமாக என்னிடம் தெரிவிக்கவில்லை. போலீசார் அவருக்கு முழு ஆதரவாக இருந்தனர். என்னை ஒரு குற்றவாளியாகதான் போலீசார் பார்த்தனர்.
திண்டுக்கல்லில் நியாயம் கிடைக்காததால் நேற்று மீண்டும் மதுரை டி.ஐ.ஜி. பாலநாகதேவியை சந்தித்து முறையிட்டேன். அவர் மதுரை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் மனு கொடுக்குமாறு கூறினார். அதன்படி அவரிடம் முறையிட்டுள்ளேன். இதற்கு தகுந்த நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கார்த்திக் பொன்குமார் 105 நாட்கள் பயிற்சி முடிந்து திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் தெரிவித்து இருந்தனர். அவர் எழுத்து பூர்வமாக உறவினர் முன்னிலையில் தெரிவிக்கட்டும். 5 ஆண்டு காலம் காத்திருந்த நான் 105 நாட்கள் காத்திருக்க முடியாதா? அவரது உறவினர் தூண்டுதலின்பேரில் கார்த்திக் பொன்குமார் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்.
காதலில் ஏமாந்த நான் கடைசி பெண்ணாக இருக்கட்டும். என்னை போன்ற எந்த பெண்ணும் பாதிக்கக்கூடாது என்றுதான் போலீஸ் படி ஏறியுள்ளேன். போலீஸ் அதிகாரி என மமதையில் கார்த்திக் பொன்குமார் நினைத்தால் அவருக்கு கடவுள் தக்க தண்டனை கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment