இந்தி கனவு கன்னி ஹேமமாலினிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான்
மாநிலம் உதய்பூரில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகம் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.
இதற்கான விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. ஹேமமாலினி நேரில் சென்று
டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார். அவரது திரையுலக சேவையை பாராட்டி இந்த பட்டம் வழங்கப்பட்டதாக
விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
ஹேமமாலினி திருச்சியில் உள்ள அம்மன் குடியில் பிறந்தவர். 1968-ல் பாண்டவ வனவாசம்
என்ற தெலுங்கு படத்தில் நடன நடிகையாக அறிமுகமானார். பிறகு ஏராளமான தெலுங்கு படங்களில்
நாயகியாக நடித்தார். அதன் பிறகு இந்திக்கு போய் பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி
நடிகையாக உயர்ந்தார்.
1980-ல் ‘ஷோலே’ படத்தில்
தர்மேந்திராவுடன் நடித்தபோது காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். ஹேமமாலினிக்கு
ஆஷா தியோல், அஹானா தியோல் என இரு மகள்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment