சமச்சீர் கல்வி குறித்த வழ க்கு முடிவுக்கு வந்தால், உடனடியாக பாடங்களை நடத்தி முடிக்க போதிய ஆசிரியர்கள் நியமிக்காவிட்டால் பாடம் நடத்த முடியாது என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2010&2011 ஆண்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்கள் குறித்து, தொட க்க கல்வித் துறை பட்டியல் எடுத்தது. அதன்படி 1.6.2010 அன்றைய நிலவரப்படி ஏற்பட்டுள்ள காலி இடங்களை நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பி கொள்ள திமுக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுமதி அளித்தது.
சமச்சீர் கல்வி குறித்த வழக்கு இன்னும் இரண்டு நாளில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் போதிய ஆசிரியர் நியமனம் செய்தால்தான் பாடம் நடத்த முடியும் என்று பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென்னிந்திய செயலாளர் வா.அண்ணாமலை,
’’அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6603 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு பட்டியல் பெறப்பட்டது.
இந்த பட்டியல்படி 31188 பட்டதாரிகள் சான்று சரிபார்ப்புக்குஅழைக்கப்பட்டனர். அதன்படி பதிவுமூப்பு, முன்னுரிமை மற்றும் இனசுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு தற்காலிக தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த பட்டியலில் உள்ள பட்டதாரிகளுக்கு 2011 ஜூன் மாதமே பணி நியமனம் கிடைக்கும் என்று நம்பி இருந்தனர். பட்டதாரிகள் 5000 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1900 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
மேலும் 7000 பேர் சான்று சரிபார்க்கப்பட்டு காத்திருக்கின்றனர். இவர்கள் தவிர 12000 பட்டதாரிகள் பதிவுமூப்பு அடிப்படையில் காத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் பணி நியமனம் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது சமச்சீர் கல்வி குறி த்த வழக்கு நடந்து கொண்டுள்ளது. இறுதி முடிவு இன்னும் இரண்டு நாளில் வரலாம். அது வந்த பிறகு உடனடியாக பாடங்களை நடத்த வேண்டிய நெருக்கடி ஆசிரியர்களுக்கு ஏற்படும்.
குறுகிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க இப்போதுள்ள ஆசிரியர்கள் போதாது. அதனால் உடனடியாக பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தால் பாடங்கள் நடத்த முடியும். உடனடியாக அரசு இதை அமல்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment