பன்னாட்டு அரிமா சங்கமும் சென்னை அரிமா மாவட்டம் 324 ஏ8, அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி பேசியதாவது: பசுமை கலாம் திட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டத்திற்கு அரிமா மணிலால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தருவதாக கூறினார். இன்று நாடு முழுவதும் ஒரு கதிர்வீச்சு பரவுகிறது. அது அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு தான்.
அன்னா ஹசாரே ஊழலை ஓழிக்க பாடுபடுகிறார். இங்கு உள்ள மாணவ தம்பிகளை தம்பி ஹசாரேவாக பார்க்கிறேன். இந்தியாவில் 100 கோடி மரங்களை நடவேண்டும் என்று அப்துல்கலாம் விரும்புகிறார்.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை பசுமை கலாம் திட்டத்தில் நட உள்ளோம். இதில் எக்ஸ்னோரா உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள் சேர்ந்துள்ளன.
மரம் வளர்க்கும் விழிப்புணர்வை மாணவர்கள் கிராமத்து மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் வளர மழைநீர் தேவை. அதற்கு மரங்கள் தேவை. மரத்தை வளர்த்து வளத்தை பெருக்குவீர். இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.
No comments:
Post a Comment