மதுரையில் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்த பொட்டுசுரேஷ், பல்வேறு வழக்குகளில் கைது
செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன் உயிரின் பாதுகாப்பு கருதி, வழக்கு விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும்போதும், கோர்ட்டில் இருந்து சிறைக்கு செல்லும் போதும் தான் செல்லும் போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து வரும்படி வழக்கறிஞர் வாகனத்தை நியமித்துள்ளார் பொட்டுசுரேஷ்.
பொட்டு சுரெஷ் செல்லும் போலீஸ் வாகனத்தின் பின்னே, பொட்டுசுரேஷின் 5 வழக்கறிஞர்கள் காரில் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நேற்று பாளையங்கோட்டையில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். விசாரணை முடிந்து மீண்டும் பாளை சிறைக்கு அழைத்து சென்றனர்.
பாளை செல்லும் வழியில் திருமங்களம் இடத்தில் வாகனத்தை நிறுத்தச்சொன்னார் பொட்டு. பின் தொடர்ந்து வந்த வழக்கறிஞர்களிடம், ‘’விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.
பிரியாணி, ஸ்னாக்ஸ், கூல்டிரிங்ஸ் என்று அவர்களும் உடனே அசத்திவிட்டனர். வழக்கறிஞர்கள், போலீசாருடன் தானும் விருந்து சாப்பிட்டுள்ளார் பொட்டு. பின்னர் சிறைக்கு சென்றிருக்கிறார். (சிறையில் இவருக்கு சிறப்பு சலுகை காட்டியதாக புகார் சுமத்தப்பட்டு பாளை சிறை அதிகாரி துரைராஜ், கடந்த வாரம் இடம் மாற்றப்பட்டார்.)
இந்த விருந்து விவகாரம் தெரிந்து முதலில் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது உளவுத்துறை. நடுவழியில் வாகனத்தை நிறுத்தி, இப்படி விருந்து சாப்பிடுவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. அப்படி இருந்தும் காவலர்கள் அனுமதித்ததோடு, அவர்களும் எப்படி விருந்து சாப்பிடலாம் என்று பைல் தயார் செய்து மேலிடத்துக்கு அனுப்பியுள்ளது உளவுத்துறை.
No comments:
Post a Comment