பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில்(28.8.2011) இரவு பொதுக்கூட்டம் நடந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நடந்த இந்த கூட்டத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசினார்.
அவர், ‘’எந்த ஒரு நொடியும் உயிர் நொடியாகவே கழிகிறது. இந்திய, இங்கிலாந்து அணிகள், இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டானது.
இதை கண்டு பயந்த இங்கிலாந்து அணி, இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று உடனடியாக நாடு திரும்பியது. அதே நேரம், இந்திய மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் மட்டுமே விளையாடலாம் என்று மத்திய அரசு சொல்லியது. அது தமிழ்நாடு. அப்படிப்பட்ட அமைதிப்பூங்காவானது தமிழகம்.
போர்க்குற்றவாளியான ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்ததால், இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மூவரின் மரணம் தண்டனையை அறிவித்திருக்கிறது மத்திய அரசு
என் இனம் இரண்டு ஆண்டுகளாக காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்றூ கதறிக்கொண்டிருந்தது. இனிமேல் நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம். எங்களிடம் உயிர் பிச்சை கேட்பார்கள். என் தலைவன் செய்த ஒரே தவறு, சரணடைந்த 15 ஆயிரம் சிங்கள வீரர்களை மன்னித்து அனுப்பியதுதான்.
மண்னித்துவிடுவதான் மாண்பு. மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம்காப்போம்’’ என்று தெரிவித்தார்.
naam pesa ninaithathellaam annan seeman pesi vittar.seivathu nam kadamai
ReplyDelete