நல்ல நல்ல படங்கள் கூட ஓப்பனிங் இல்லாமல் சுருண்டு விடுகிறது. அண்மையில் வெளியான போட்டா போட்டி, வெங்காயம் போன்ற படங்கள் பார்த்தவர்களை பிரமிக்க வைத்தாலும் தியேட்டரில் கூட்டம் இம்மியளவும் இல்லை. இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பெருகிவரும் டிராபிக் நெரிசல் கூட தியேட்டருக்கு மக்கள் வராமல் போக காரணமாக அமைகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று மூளையை கசக்கிய அபிராமி மெகாமால் உரிமையாளர் அபிராமி ராமநாதனும், அவரது துணைவியார் நல்லம்மை ராமநாதனும் ஒரு முடிவு செய்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து 26476565, 26256565 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். வீடு தேடி கால்டாக்சி வந்து உங்களை அழைத்துச் செல்லும்.
அபிராமி தியேட்டர் இருக்கும் புரசைவாக்கத்திலிருந்து, அடையார் பகுதிக்கு காரை வரவழைக்கிறோம் என்று வையுங்கள். தியேட்டரிலிருந்து அடையார் வரைக்கும் வருகிற தொகையையும் நாம் தர வேண்டியிருக்குமோ என்று அஞ்சவே தேவையில்லை. நீங்கள் காரில் ஏறி அமர்கிறபோது இருக்கிற மீட்டர்தான் கணக்கு. அதே மாதிரி திரும்ப வீட்டுக்கு வருவதற்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் திருமதி.நல்லம்மை.
அதுமட்டுமல்ல, தியேட்டரையே ஒரு சுற்றுலா தலமாக்கி வைத்திருக்கிறார்கள் இவர்கள். பனி உலகம், விளையாட்டு உலகம், மீன் உலகம், 4டி தியேட்டர், உணவு விடுதிகள் என்று நேரத்தை போக்க அருமையான இடமாகவும் இருக்கிறது அபிராமி மெகாமால்.
இது நல்ல ஐடியாவா இருக்கே. அப்பவாவது ஜனங்களை தியேட்டர் பக்கம் பாக்க முடியுதான்னு பாக்கலாம்
ReplyDelete