கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக நீதிமன்றம் அவருக்கு 4 நாள் ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குமரி கான்டிராக்டர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சூரைச் சேர்ந்த ஹரிதாஸ் நம்பூதிரி என்ற பூசாரியும் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பவர்களில் பத்னாபுரத்தைச் சேர்ந்த பிஜித் குமாரும் ஒருவர். இவருக்கும் பத்னாபுரத்தைச் சேர்நத பெண்ணுக்கும் வரும் 1-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான நிச்சயதார்த்தம் கடநத 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இந்த நிலையில் சிறுமி பலாத்கார வழக்கில் பிஜித்குமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பிஜித் குமாரை திருமணம் செய்ய உள்ள மணப்பெண் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நான் திருமணம் செய்ய உள்ள பிஜித்குமார் நிரபராதி என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக அவருககு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.
இதை விசாரித்த நீதிமன்றம் வரும் 4-ம் தேதி வரை பிஜித்குமாருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. செப்டம்பர் 5-ம் தேதி அவரை மீண்டும் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment