மங்காத்தா ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளப்போகிறோம். இதற்கிடையில் சென்னையில் முகாமிட்டிருந்த அஜீத் அடிக்கடி ஐதரபாத்துக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். காரணம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பில்லா-2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை பற்றிதான் இன்டஸ்ட்ரியே பேசிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை, மணிரத்னமும், அஜீத்தும் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்கள். பொதுவாக மணிரத்னம் எந்த ஹீரோவையும் இதுவரை தேடிப் போனதில்லை என்கிறார்கள். கமல்ஹாசனிடம் மட்டும்தான் எவ்வித ஈகோவும் இல்லாமல் அவரது வீட்டுக்கே போய் பேசிக் கொண்டிருப்பாராம்.
அஜீத்தை சந்திக்க அவரே வந்ததுதான் ஆச்சர்யம் ஸ்கொயர் ஆகியிருக்கிறது. இந்த சந்திப்புக்கு பின்னணியில் இருக்கிற மர்மத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும் சினிமாக்காரர்கள் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கக் கூடும் என்கிறார்கள்.
மவுசு கூடிடுச்சே மங்கத்தா...
No comments:
Post a Comment