தங்கையின் வருகையை இப்போதுதான் சந்தோஷத்தோடு அறிவித்தோம். அக்காவின் பெருமை எப்படியிருக்கிறது தமிழ்சினிமாவை பொறுத்தவரை?
சந்தேகமென்ன, ரிப்பேர்தான். ஸ்ருதிஹாசன் நடிக்கும் பட வட்டாரங்களில் விசாரித்தால், மூக்கை சிந்தி முன்புற சட்டையில் துடைத்துக் கொள்கிறார்கள். தினந்தோறும் அறுபதாயிரம் செலவாகிறதாம் இவரது அடிப்பொடிகளுக்கு மட்டும். மும்பையிலிருந்து வருகிற காஸ்ட்யூமர், டச்சப், மேக்கப் மேன், கார் டிரைவர் என்று அத்தனை பேருக்கும் தனித்தனியே கறந்துவிடுகிறாராம்.
ஏதோ இவர் மட்டும்தான் இப்படி வாங்குகிறாரா என்று கோபப்படுகிறவர்களுக்கு ஒரு ஸ்மால் இன்ஃபர்மேஷன், மற்ற நடிகைகள் இவ்வளவு வாங்குவதில்லை. பொதுவாக பல நடிகைகளுக்கு இந்த டச்சப் மேக்கப் குழுவினரின் பேட்டாவையும் சேர்த்து சம்பளத்தோடு கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் சம்பளத்தையும் தனியாக பெற்றுக் கொள்கிற ஸ்ருதி, இந்த செலவுகளை தயாரிப்பாளர் தலையில் தனியாக கட்டிவிடுவதால், ஒரு படத்திற்கு இதற்கான செலவு மட்டும் அறுபது லட்சம் ஆகிவிடுகிறதாம்.
இளநிக்கு ஆசைப்பட்டவங்க ஏணிக்கு அஞ்சுனா எப்படி?
No comments:
Post a Comment