ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி நளினி சிறைத்துறைக்கு மனு செய்துள்ளார். இதை ஏற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, வேலூர் சிறைக்கு அதிகாரிகள் கொண்டு செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக பின்னர் குறைக்கப்பட்டது.
நளினியும், முருகனும் காதல் மணம் புரிந்தவர்கள். கைது செய்யப்பட்டபோது நளினி கர்ப்பிணியாக இருந்தார். சிறையில்தான் அவருக்கு மகள் பிறந்தார்.
வேலூர் மகளிர் சிறையில் நளினியும், ஆடவர் சிறையில் முருகனும் அடைக்கப்பட்டனர். கடும் சட்ட போராட்டத்திற்குப் பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்தித்துக் கொள்ள கோர்ட்டின் அனுமதியைப் பெற்றனர். அதன்படி சந்தித்து வந்தனர்.
ஆனால் கடந்த திமுக ஆட்சியின் கடைசிக்காலத்தில், நளினி மீது திடீரென பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அவரது சிறை அறைக்குள் செல்போன்கள் இருந்ததாக கூறினர். இதையடுத்து நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றி விட்டனர். அன்று முதல் கடந்த எட்டு மாதமாக கணவரைப் பார்க்காமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளார் நளினி.
இந்த நிலையில் தற்போது முருகனுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தூக்கில் போட நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய உள்துறையும், மாநிலஅரசின் மூலமாக வேலூர் சிறைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நளினி சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
அதை ஏற்று நளினியை வேலூர் சிறைக்கு அதிகாரிகள் கொண்டு செல்லலாம், முருகன், நளினி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை நளினியின் கோரிக்கைக்கு சிறைத்துறையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்று தெரிகிறது.
சிறையில் திடீர் ஆய்வு
இதற்கிடையே, சிறைத்துறை டிஐஜி மற்றும் வேலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று காலை சிறையில் பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். சிறை முழுவதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க சிரை முன்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment