நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகேயுள்ள மேலப்புத்தனேரியைச் சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு நெல்லையை அடுத்த அருகுன்குளத்தில் குடியேறி அங்குள்ள எட்டெழுத்து பெருமாள கோவிலில் சேவை செய்து வந்தார்.
அதே எட்டெழுத்து பெருமாள் கோவிலை நிர்வாகித்து பூஜைகள செய்து வந்த சாமியார் வரதராஜன் பழனியின் இரு மகள்கள் மற்றும் ஒரு மகனின் கல்வி கட்டண செலவுகளுக்கு உதவி செய்து வந்தார்.
பழனியி்ன் மூத்த மகள் மாலதி பாளை அருகே உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாலதி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த வரதராஜன் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே மாலதி கூச்சல் போடவே வரதராஜன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் பழனி குடும்பத்துடன் மேலப்பாளையத்தில் குடியேறினார்.
தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஐபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அவர் மனு அனுப்பினார்.
இதையடுத்து நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் தாழையுத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எஸ்ஐ சண்முக வடிவு ஆகியோர் விசாரணை நடத்தி சாமியார் வரதராஜனை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்

No comments:
Post a Comment