ராஜீவ காந்தி மட்டும் இன்னேரம் இருந்திருந்தால், தூக்குக் கயிற்றுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரின் உயிரையும் காப்பாற்றியிருப்பார் என்று திமுக தலைவர் கருணாநிதி மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும். அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து விட்டனர். எனவே அவர்களை தூக்கில் போடக் கூடாது என்று சோனியா காந்திக்கும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு உருக்கமான கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அதில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தமூவரும் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டனர். வாழ்நாள் முழுவதும் வருந்துவது என்பது தூக்கை விட மோசமானது. அந்த தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டனர்.
இதற்கு மேலும் குற்றவாளிகளை தூக்கில் போடுவதால் எந்தப் பயனும், விளைவும் ஏற்பட்டு விடாது.
எனவே மூவரையும் மன்னித்து தூக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தமிழக அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும்.
ராஜீவ் காந்தி மட்டும் இன்னேரம் உயிருடன் இருந்திருந்தால் இவர்களை நிச்சயம் காப்பாற்றியிருப்பார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:
Post a Comment