நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் 28.08.2011 அன்று இரவு நடந்தது.
அந்த விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில்,
இந்த நிகழ்ச்சிகளுக்கு காரணம் விஜய்யின் ரசிகர்கள். விஜய்யின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீங்கள் (ரசிகர்கள்) ரயில் பெட்டிகள். நான் ரயில் இன்ஜின். இந்த இன்ஜினில் விஜய் கிரின் சிக்னல் காட்டும் அதிகாரி. இந்த ரயில் இன்ஜின் புறப்பட வேண்டுமானால் அந்த கிரின் சிக்னல் அதிகாரியின் (விஜய்) சிக்னல் கிடைத்தால் மட்டுமே இந்த ரயிலை இழுத்துச் செல்ல முடியும்.
இவ்வளவு பெரிய பாதுகாப்புக் கொடுத்த மதுரை போலீசாருக்கு நான் காலில் விழுந்து நன்றி சொல்லிக்கொள்கிறேன். எனது சமீப படமான சட்டப்படி குற்றத்தில், ஒரு நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அதை இந்த மதுரை மண்ணில் மதுரை போலீசார் நிருப்பித்து காட்டியுள்ளார்கள். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.
No comments:
Post a Comment