கோவையில், நேற்று (28.08.2011) நடந்த “ஓர் அன்னையின் கணவு என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து,
வெளிநாட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகந்த் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், “உண்மையை சொல்லுங்கள், நீங்கள் மருத்துவமனையில் இருந்த “அந்த நிமிடத்தில்“ என்ன நினைத்தீர்கள் என்று கேட்டேன்.
அதற்க்கு ரஜினியாவர்கள், “நான் ரஜினி என்பதையே மறந்துவிட்டேன், என் உடல், உயிர் என இரண்டு மட்டுமே நினைவுக்கு வந்தது. பணம், புகழ், உற்றார், உறவினர்கள் யாரும் நினைவுக்கு வரவில்லை என்றார்.
பிறகுதான், நாம் யார் யாருக்கு என்ன செய்தோம், யார் யாருக்கு உதவி செய்யாமல் மறந்து விட்டோம் என்று எண்ணத்தோன்றியது என்று என்னிடம் ரஜினி அவர்கள் கூறினார்.
அவர் யார் யார்க்கு: என்று குறிப்பிட்டு கூறியது, நம்மை சுற்றியிருக்கும் உற்றார்..., உறவினர்..., மற்றும் நண்பர்களைத்தான், நம் உடம்பில் தெம்பு இருக்கும் போதே நம்மால் முடிந்த உதவிகளையும், நன்மைகளையும் அவர்களுக்கு செய்து விடவேண்டும். ஒழுக்கம், நேர்மை, உழைப்பு மூன்று மட்டுமே மனித குல மேம்பாட்டுக்கு ஏற்ற மிகமுக்கியமான பண்புகள் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment