பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். செப்டம்பர் 9-ந்தேதி 3 பேரும் தூக்கில் போடப்படுவார்கள் என்ற அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. உலக தமிழர்களிடையே இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பேரின் உயிரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் தமிழ் உணர்வாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக நாளை மறுநாள் (29-ந்தேதி) சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படுகிறது. தங்களது உயிரை காப்பாற்ற கோரி, 3 பேரும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் மனு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் இதுவரை தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உயிர் தப்பியுள்ளதாக வக்கீல் தடா சந்திரசேகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பல்வேறு உதாரணங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1972-ம் ஆண்டு பஞ்சாபில் முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தயாசிங் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டது. இதில் 2 1/2 ஆண்டுகளுக்கு பின்னர் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தயாசிங்கை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு தயாசிங், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்னர். இதனையே மனுவாக ஏற்றுக்கொண்ட நீதிபதி கள் தயாசிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தனர். 1983-ம் ஆண்டு சென்னையில் 10-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் பலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இவர்களை வைத்தீஸ்வரன் என்பவர் விஷஊசி போட்டு கொன்றது தெரிய வந்தது. இந்த வழக்கிலும் இவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர் குறைக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ண நாயர், ஈரோட்டை சேர்ந்த கோவிந்த சாமி ஆகியோரும் தூக்கு தண்டனையில் இருந்து உயிர் தப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 161, 72-வது பிரிவுகளின் கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.
ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 71-வது பிரிவின் கீழ் மத்திய அரசிடமும், 161-வது பிரிவின் கீழ் மாநில அரசிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தித்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
தூக்கு தண்டனை தொடர்பான ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், கருணை மனுக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற நேரங்களில் காலதாமதமாக எடுக் கும் முடிவுகளால் தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருப்பவர்கள் மரணத்தின் வாயிலில் ஒவ்வொரு நிமிடமும் நின்று கொண் டிருப்பார்கள். எனவே இதில் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இரட்டை தண்டனை கொடுப்பது போன்றதாகும்.
நீதி துறையை நம்பி இருக்கும் மக்களின் நம்பிக் கையை இது கேள்விக் குறியாக்கி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே இது போன்ற முன் உதாரணங்களை கவனத்தில் கொண்டு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment