வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக மதுரைக்கு நடிகர் விஜய் விமானம் மூலம் (28.08.2011) வந்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 1.40 மணிக்கு வந்திறங்கிய விஜய்யை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். 75 வாகனங்களுக்கு மேல் விமான நிலைய வரவேற்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
மதுரை ஏடிஎஸ்பி மயில்வாகணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர். இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டருந்தது. விமான நிலையத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கையெழுத்துட்ட ஒரு கடிதம் விமான நிலைய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வெங்கடேஷ், பாஸ்கர், தஙகபாண்டி ஆகிய 3 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு காரில் வெளியே வந்த நடிகர் விஜய், அங்கிருந்து ஓய்வுக்காக பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். விஜய் வாகனத்துக்கு முன்னும் பின்னும் ரசிகர்களின் கார்களை அனுமதிக்கவில்லை போலீசார்.
விஜய்யை காண முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் பாதுகாப்பைப் போல, நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா. ஏன் இவ்வளவு கெடுபிடிகள் செய்கிறீர்கள். விஜய் பேசாமல் போவார். தேவையில்லாமல் பாதுகாப்பு என்ற பெயரில் ரசிகர்களாகிய எங்களை ஏன் நெருங்க விடவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம் என்றும், விஜய்க்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும்படி மேலிட உத்தரவு வந்ததால், அவருக்கும் கூடுதல் பாதுகாப்பு தர வேண்டியிருந்தது என்றும் போலீசார் ரசிகர்களிடம் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர்
No comments:
Post a Comment