மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பதை மறுபடியும் மறுபடியும் யார் மூலமாகவோ சொல்லிக் கொண்டேயிருக்கிறது உலகம். அது ஒட்டியிருக்கும் லேட்டஸ்ட் போஸ்டர் 'நடிகை வனிதாவும் முன்னாள் கணவர் ஆகாஷ§ம் ஒன்று சேர்ந்துட்டாங்களாம்'
தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கல்லெடுத்து வீசாத குறையாக கோபப்பட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம்.
அப்படின்னா வனிதா இப்போது யாருடன் இருக்கிறார்? சந்தேகமென்ன... முதல் கணவர் ஆகாஷ§டன்தான். அவரும் என்னை புரிஞ்சுக்கலை. நானும் அவரை புரிஞ்சுக்கலை. என்னை பிரிஞ்ச பின் அவர் ஸ்ரீராமானாதான் வாழ்ந்திருக்கார். இந்த பிரச்சனைகளுக்கு பிறகு எனக்கு அவர் மேல உள்ள அன்பும் மரியாதையும் இன்னும் கூடியிருக்கு.
தனக்கு ஒரு ஸ்டெப் ஃபாதர் இருப்பதை ஸ்ரீஹரி விரும்பலை. அதனால்தான் அவன் என்னை பிரிய முடிவு பண்ணியிருக்கான். இப்போ அவனுக்காக நான் பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். ராஜனும் அதை புரிஞ்சுகிட்டு விலகிட்டார். என் பழைய குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கோம் என்கிறார் வனிதா.
அப்பா மீது எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. அவரை சந்திக்கணும்னு வீட்டுக்கு போனேன். அவர் இல்லை. அம்மாவை பார்த்தேன். வரலட்சுமி நோன்பு கயிறு கட்டிவிட்டாங்க. நான் மறுபடியும் அப்பா அம்மா கூட ஒன்று சேர்வதை சிலர் விரும்பலைன்னு தெரியுது. நான் வருவேன்னு கேட்டை பூட்டி வைக்கிறாங்க. அதை ஏறிக்குதிச்சு உள்ளே வர்றவ நான்ங்கிறது அவங்களுக்கு தெரியல போல...
சண்டையா இருந்தாலும் சரி, சமாதானமா இருந்தாலும் சரி, ஒருகை பார்க்காமல் விட மாட்டார் போலிருக்கிறது வனிதா.
No comments:
Post a Comment