இப்போது எங்களால் என்ன செய்யமுடியும்? தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங் கட்சிக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேமுதிக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்த பிராசரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. இப்போது மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால், இப்போது எங்களால் என்ன செய்யமுடியும்? தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம்.
நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங் கட்சிக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேமுதிக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். யாருக்கும் பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.
தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல பல திட்டங்களை தேமுதிக வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான், இத்திட்டங்களை செயல்படுத்த முடியும். எனவே, தேமுதிக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment