கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை, வாடிகன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் நேற்று முதல் பக்கத்தில் வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த பரபரப்பான செய்தியை எழுதி இருந்தார்.
அதில், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றசாட்டுகளால், போப் மனமுடைந்து காணப்படுகிறார்.
அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 85 வயது நிறைவடைந்த உடன், போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது.
டைமஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும் மேற்பட்ட குழந்தை பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால், அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த செய்திகளை வாடிகன் அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து வாடிகன் நகர செய்தி தொடர்பாளர் பாதிரியார் பிடரிக்கோ லோம்பார்டி கூறியதாவது, போப்பின் உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும் எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை.
ஜெர்மனிக்கு சென்ற போதும் அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது.
ராஜினாமா குறித்த தகவல்களை எழுதியவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார், என்றார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட நிருபர் ஆண்டோனியோ கூறியதாவது, இந்த வதந்தியை கிளப்பி விட்டதே, வாடிகன் நகரத்தை சேர்ந்தவர்கள் தான். ராஜினாமா செய்வது குறித்து தகவலை, போப் இதுவரை மறுக்கவே இல்லை, என்றார்.
நன்றி
ReplyDelete