சூர்யா, கமல் மகள் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் “7 ஆம் அறிவு” ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.
இதில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்... படத்தின் க்ளைமாக்சில் ஒரு பாடல் வைத்திருக்கிறோம். உலக தமிழர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடணும்னு நினைச்சு நினைச்சு எழுதியது அந்த பாடல். க்ளைமாக்சில் வருகிற பாடல் என்பதால் ரொம்பவே சிரத்தை எடுத்து மியூசிக் போட்டிருக்கார் ஹாரிஸ். இந்த பாடலை எழுதி இருப்பவர் பா.விஜய். இந்த பாடலை உலகத்தின் எந்த மூலையில் இருக்கிற தமிழனும் கொண்டாடியே தீர வேண்டும் என்றார். இந்த
மேலும் அவர் இந்த படத்தை நான் பார்த்ததும் எனக்குள்ளே ஒரு கர்வம் வந்தது. ஒரு திமிர் வந்தது. ஒரு டைரக்டர் என்ற என்கிற திமிரல்ல அது. ஒரு தமிழன் என்கிற திமிர் அது. இப்ப எங்கிட்ட இருக்கிற அந்த திமிர், ரிலீசுக்கு பின்னாடி உங்களுக்கு வரும் என்றார் ரசிகர்களை பார்த்து.
‘ஏழாம் அறிவு’ படத்தின் க்ளைமாக்ஸ் பாடல்!
-----------------------------------------------------------------------------------
இன்னும் என்ன தோழா... எத்தனையோ நாளா...
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே...
நம்ப முடியாதா... நம்மால் முடியாதா...
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!
யாரும் இல்லை தடைபோட உன்னை மெல்ல எடைபோட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு?
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!
வந்தால் அலையாய் வருமோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம்!
இன்னும் இன்னும் இருக, உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக... எழுக!
பல்லவி - 1
--------------------
மனம் நினைத்தால், அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடுவானம், இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால், அதில் கள்ளிப்பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தங்க வீரங்கள் மறக்குமா?
ஒரே மணம், ஒரே குணம், ஒரே தரம்... எதிர்காலத்தில்!
அதே திடம், அதே பலம், அகம் புறம்.... நம் தேகத்தில்!
பல்லவி - 2
--------------------
கழுத்தோடு ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியில் சுவைக்கிறோம்
பனிமூட்டம் வந்து படர்ந்தென்ன சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகைமூட்டம் வந்து பணியாமல் எங்கள் இருவிழி உறங்குமா?
இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு!
பாடலாசிரியர் - பா.விஜய்
No comments:
Post a Comment