பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப்அக்தர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் டெண்டுல்கரை விமர்சித்துள்ளார். தனது பந்தை சந்திக்க அவர் பயப்பட்டார் எனவும், டிராவிட், டெண்டுல்கர் ஆகியோர் அணி வெற்றியை உறுதி செய்யக்கூடிய வீரர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. டெண்டுல்கர் கருத்து தெரிவிக்க மறுத்தாலும் பல வீரர்கள் அக்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அக்தர் புத்தகத்திற்கு பாகிஸ்தான் வாரிய தலைவர் இஜாஸ்பட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கர், டிராவிட்டை விமர்சித்தால் புகழ்பெறலாம் என்ற நோக்கில் அக்தர் இவ்வாறு நடந்திருப்பதாகவும், இவ்வாறு எழுதியிருப்பது முட்டாள்த்தனமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே டெண்டுல்கர் பற்றி விமர்சனம் செய்திருப்பதை அக்தர் மறுத்துள்ளார். இதுபற்றி கூறும் போது, டெண்டுல்கர் மிகச்சிறந்த வீரர். சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடன் ஒப்பிட நான் யார். என்னுடைய புத்தகத்தை தெளிவாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.
நான் குறிப்பிட்டிருப்பது, குறிப்பிட்ட ஆட்டத்தில், குறிப்பிட்ட சூழ்நிலையை மட்டும் தான். அப்போது முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்த டெண்டுல்கரால் பந்தை அடித்து ஆட முடியவில்லை. அப்போது அவரை நான் குறிவைத்து மிரட்டினேன். மற்ற போட்டிகளில் அவர் என்னை மிரட்டியி ருக்கிறார். அன்று அவர் எனது பந்துவீச்சை சமாளிக்க திணறினார் என்று தான் கூறினேன்.
அதே போல தான் டிராவிட்டையும் குறிப்பிட்டேன். டிராவிட்டை டெஸ்ட் போட்டிகளில் அவுட்டாக்குவது கடினம். ஒருநாள் போட்டிகளில் அவர் வெற்றி நாயகன் தான். கடந்த 6 வருடங்களாக டெண்டுல்கரின் ஆட்டம் அதிசயப் படும் வகையில் உள்ளது என்று தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment