சரண் தன்னை பலாத்காரம் செய்ததற்கு ஆதாரமான வீடியோவை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்ததாக சோனா தெரிவித்தார். ஆனால் சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சோனா நேற்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன்.
வீடியோவை எனது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும், விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார்.
வீடியோ ஆதாரமே கிடைத்துவிட்டது. எனவே, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்று பார்த்தால் புஸ்ஸாகிவிட்டது. காரணம் சோனா போலீசாரிடம் வீடியோ எதையும் கொடுக்கவேயில்லையாம். புகார் மனுவை மட்டும் கொடுத்துவிட்டு, வீட்டுக்குப் போய் உதவியாளரிடம் வீடியோவை கொடுத்தனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர், சென்றவர் தானாம்.
இந்த தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து சோனாவிடமே கேட்கலாம் என்று நினைத்து தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகத் தான் தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. சமரச பேச்சுவார்த்தைகளை சோனா வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment