2ஜி விவகாரம் குறித்த நிதியமைச்சக கடிதம் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து விவாதிக்கவுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
2ஜி விவகாரம் தொடர்பாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டதாக குற்றம் சாட்டி மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய குறிப்பு பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி விட்டது. இதைக் காரணம் காட்டி ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நிதியமைச்சக குறிப்பு விவகாரம் தொடர்பாக அப்செட் ஆன ப.சிதம்பரம் சோனியாவைச் சந்தித்து தான் ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக உள்ளனர். மேலும் ப.சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை என்று சிபிஐயும் கூறியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்.அப்போது பிரணாப், ப.சிதம்பரம் குறித்து அவர் விவாதிப்பார் என்று தெரிகிறது. மேலும் பிரதமரின் ஐ.நா. பயணம், உள்நாட்டு அரசியல்குறித்தும் விவாதிக்கவுள்ளார் சோனியா.
இன்று மாலையில் காங்கிரஸ் முக்கிய உறுப்பினர் குழுக் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment