இணைய தளங்களில், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்க அதி நவீன யுக்திகள் இதுவரை கையாளப்படவில்லை என்பதால், குற்றங்களை பெருமளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதாவது ஒரு விதத்தில் சைபர் குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந்த குற்றங்களை செய்ய பிரபலங்களின் பெயரை அவர்கள் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அவர்களது தனிப்பட்ட தகவல்களை திருடி, மோசடியான வழிகளில் பயன்படுத்துகின்றனர். மிகவும் ரகசியமாக வைக்கப்படும் பாஸ்வேர்டு கூட அவர்களின் கைக்கு கிடைத்து விடுகின்றன.
இதுபற்றி, இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது. மிகவும் ஆபத்தான இந்திய பிரபலங்கள் என்ற தலைப்பில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், பல அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-
மக்களை ஏமாற்ற ரசிகர்களை வசீகரிக்க சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூகத்தில் பிரபலமானவர்களையும், நடிகர், நடிகைகளின் பெயரையும் பயன்படுத்துகின்றனர். அவர்களது இமெயில் முகவரிகளை திருடி, அவர்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை திரட்டுகின்றனர். புதிதாக கற்பனையான தகவல்களை அவர்களது தளத்தில் சேர்த்து விடுகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களை மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்தும், ஏதாவது வர்த்தக பொருளுக்கு விளம்பரம் செய்வது போலவும், அதை பொது மக்களும், ரசிகர்களும் வாங்கும்படி வற்புறுத்துவது போன்றும் இணையதளத்தில் சில மோசடி பேர்வழிகள் இணைத்து விடுகின்றனர். ஆபாசமாக சித்தரிக்கப்படும் நடிகைகளில் கத்ரினா கைப் முதலிடத்தில் உள்ளார்.
எந்த வெப்-சைட்டை, திறந்தாலும் கத்ரினா கைப் தோற்றம் இடம் பெற்று இருப்பதை காணலாம். அதே போல் தீபிகாபடுகோனே பெயரில் விளம்பர மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. பிரபல நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் இவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கரீனா கபூரின் பெயர், புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கண்ட மூன்று நடிகைகளின் “பலான” வீடியோ காட்சிகளும் வெப் சைட்டுகளில் உலவ விடப்பட்டுள்ளன. இந்தி நடிகர்களில் சாயிப் அலிகான், ஜான் ஆப்ரகாம், அமிர்கான், ஷாருக்கான், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யாராய், பிபாசா பாசு ஆகியோர் பெயரிலும் மோசடிகள் அமோகமாக நடை பெற்று வருகின்றன.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment