மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசனின் மூத்த மகள் டாக்டர் கமலா செல்வராஜ். இவர் நுங்கம்பாக்கம் திருமூர்த்தி சாலையில், 5-வது தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் அருகில் ஜி.ஜி. மருத்துவமனை என்ற பெயரில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
சோதனை குழாய் மூலம் குழந்தை கருத்தரிப்பில் புகழ்பெற்ற ஆஸ்பத்திரியாகும். தமிழ்நாட்டின் முதல் சோதனை குழாய் குழந்தையும் இங்குதான் பிறந்தது. டாக்டர் கமலா செல்வராஜூம் மகப்பேறு மருத்துவ நிபுணர் ஆவார்.
இன்று காலை கமலா செல்வராஜ் வீடு, ஆஸ்பத்திரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் என்று சென்று சோதனை நடத்தினார்கள். 12 அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து வீட்டிலும், ஆஸ்பத்திரியிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. வரிஏய்ப்பு சம்பந்தமாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல் வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்திலும் இன்று வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
No comments:
Post a Comment