சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த ஷேக்மாதர். இவர் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் வருமாறு:-
நான் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவன தேவைக்காக புரோக்கர் மணி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி தருமாறு கேட்டேன். அவர் நடிகர் மன்சூர்அலிகான் “மேக்செல் பைனான்ஸ்” நடத்தி வருகிறார். அவரிடம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றார்.
முதலில் ரூ.15 லட்சமும், 2-வது தவணையாக ரூ.15 லட்சமும் மொத்தம் ரூ.30 லட்சம் கடன் பெற்றேன். இதற்கு வட்டியாக ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் எடுத்துக் கொண்டார். மீதம் உள்ள தொகை கொடுத்தார். வாராவாரம் வட்டி-அசல் கட்டினேன். இதுவரை ரூ.26 லட்சம் கட்டி விட்டேன். மீதி ரூ.4 லட்சம் மட்டும் கொடுக்க வேண்டும்.
எனக்கு வரவேண்டிய இடத்தில் பணம் வராததால் தொகையை செலுத்த தாமதம் ஏற்பட்டது. அதற்குள் மன்சூர்அலிகானும், அவரது ஆட்களும் என்னை மிரட்டி பணம் கேட்கிறார்கள். என் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றனர். இதுபற்றி போலீசில் புகார் செய்தேன். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினார்.
அப்போது சமாதானமாக செல்வதாக சொல்லி விட்டு மீண்டும் என்னிடம் பணம் கட்டு மிரட்டுகிறார். ரூ.30 லட்சம் தரவேண்டும் என்றும், நான் கொடுத்த செக்குகளை பயன்படுத்தி மிரட்டுகிறார். இந்த கந்துவட்டி கொடுமையில் இருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment