தமன்னா இந்த ஆண்டு தெலுங்கில் மூன்று படங்களிலும், தமிழில் இரு படங்களிலும் நடித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் மும்பையில் தனது பெற்றோருடன் பிறந்த நாளை கொண்டாடினார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
இந்த வருடம் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். உலகில் உள்ள முக்கிய இடங்களை சூட்டிங்கின் போது பார்த்து சந்தோஷப்பட்டேன். புத்தாண்டில் நிறைய நல்ல படங்களில் நடிக்கிறேன். மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
அது நிறைவேறி உள்ளது. இன்னும் நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு என்றால் அது ரஜினி ஜோடியாக நடிப்பது எல்லா நடிகைகளும் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகின்றனர். அது போல் எனக்கும் அவருடன் ஜோடி சேர ஆசை உள்ளது. அது எப்போது நிறைவேறும் என்று தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment