காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.அன்பரசு தலைமையில் இந்த பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஆர்.அன்பரசு தலைமையில் வன்னியர் சமுதாய தலைவர்களை ஒருங்கிணைத்து தமிழக சிந்தனையாளர்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த பேரவையின் கலந்தாய்வு கூட்டம் தியாகராய நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அன்பரசு தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நிருபர்களிடம் பேசிய இரா. அன்பரசு, ‘’இந்த சமுதாயத்தின் பல்வேறு கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலே உள்ளது.
தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா வன்னிய சமுதாயம் மட்டுமல்ல அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்கிறார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியதோடு அல்லாமல் 9வது அட்டவணையிலும் இடம் பெற செய்து சாதனை படைத்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக செயல்படும் முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை இல்லாத அளவிற்கு 5 வன்னியர்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார். இதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது என்று சமூக சிந்தனையாளர்கள் பேரவை முடிவெடுத்துள்ளது.
இன்று அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி இந்த கோரிக்கைகளோடு எங்கள் பேரவையை சேர்ந்த 25 பேர் கொண்ட குழு முதலமைச்சரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்பதோடு பாராட்டு விழா தொடர்பாகவும் அனுமதி பெற உள்ளோம்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment