விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, September 7, 2011

    உங்கள் முதல்வரின் கதை என்ன?- கருணாநிதி கேள்வி

    நான் அண்ணா அறிவாலயத்திலும், கோபாலபுரத்திலும் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக கூறும் அமைச்சரே, உங்கள் முதல்வரின் கதை என்ன என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

    இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

    தமிழக அரசின் வீட்டு வசதித் துறை சார்பில் 5-8-1988ல் அதாவது கவர்னர் ஆட்சிக் காலத்திலேயே அரசாணை எண் 1100 பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையில், தி.மு.க. அறக்கட்டளைக்கு அலுவலகம், திருமண மண்டபம், மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்கு பின்வரும் நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மொத்த நிலத்தில் பத்து சதவீதமான 1890 சதுர மீட்டர் நிலத்தினை திறந்தவெளி நிலமாக பொது மக்களுக்கான பொழுது போக்குப் பூங்காவாக தி.மு.க. அறக்கட்டளையே பராமரிக்க வேண்டும். மேற்படி பத்து சதவீத இடத்தில் எந்தவிதக் கட்டிடங்களும் கட்டப்படக் கூடாது. இதுதான் அரசாணையில் விதிக்கப்பட்ட நிபந்தனை.

    இந்த ஆணையின்படி தி.மு.க. அறக்கட்டளையினால் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அறக்கட்டளை அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, மாநகராட்சிக்குத் தரப்பட்ட இடத்திற்குப் பதிலாக அண்ணா அறிவாலயத்தின் முகப்பிலே அதே அளவிற்கான இடத்தை ஒதுக்கித் தர விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டுமென்றும் கேட்டு, அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 8-1-1998ல் அனுமதியும் கொடுத்தது.

    ஆனால் 2001ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, 28-6-2004 தேதி கடிதத்தில் தி.மு.கழக அறக்கட்டளையினால் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்த இடத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், ஏற்கனவே ஒதுக்கித் தந்த இடத்தைத் தான் தர வேண்டுமென்றும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கேட்டு எழுதியது.

    அரசின் இந்தக் கடிதத்திற்கு தி.மு. கழக அறக்கட்டளை சார்பில் மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குப் பதிலாக எந்தக் காரணத்தினால் மாற்று இடம் தர வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதையெல்லாம் விளக்கி அரசுக்கு 4-7-2004ல் ஒரு கடிதமும் 3-8-2004ல் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் இந்தப் பிரச்சினை தொடர்பாக வழக்கொன்றும் தொடரப்பட்டது. அதில் நீதியரசர், நான்கு வார காலத்திற்கு எதுவும் செய்யக் கூடாது என்றும், அறக்கட்டளையின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

    ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு தாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறிய மே 2006 வரை நீதிபதி கூறியதற்கொப்ப எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. பிரச்சினையை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதன் பிறகு சென்னை மாநகர் வளர்ச்சிக் குழுமமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து குறிப்பிட்ட இடத்தை நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 7-12-2007ல் அரசின் சார்பில் இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஆணையில், இந்தப் பிரச்சினையில் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதென்றும், விளக்கம் கேட்டு அ.தி.மு.க. அரசு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும், மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளாமல் திறந்தவெளியாகவே பராமரித்திட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதுதான் அண்ணா அறிவாலயத்தில் சென்னை மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பற்றிய முழு விவரமாகும். அ.தி.மு.க. உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேசும்போது ஏதாவது குறை சொல்ல வேண்டுமென்பதற்காக இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் சொல்கிறார்களே?

    என் வீட்டிற்குப் பின்னால் உள்ள ஓர் சிறு இடத்தைப் பற்றி திரும்பத் திரும்ப அதைப் பற்றிய விளக்கத்தை நான் கொடுத்திருந்த போதிலும் நேற்றையதினம் பேரவையில் ஒரு அமைச்சர் புகார் கூறியிருக்கிறார்.

    அ,தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அதற்காக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அதை அவையிலே எழுப்ப பேரவைத் தலைவர் அவசர அவசரமாக அனுமதி கொடுத்துள்ளார். அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் சென்னை மாநகராட்சியில் அரசுக்குச் சொந்தமான கால்வாய் புறம்போக்கு போன்ற அரசு நிலங்களில் அதிகார வர்க்கத்திலிருந்த சிலர் வீடு மற்றும் நிலையான கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.

    அந்தச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் மற்ற யாரைப் பற்றியும் பேசாமல் என்னுடைய வீட்டிற்குப் பின்னால் உள்ள ஒரு கால்வாய் புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் 13 அடிகள் மட்டுமே அகலம் கொண்ட ஒரு சிறு இடத்தைப் பற்றி அவையிலே நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது.

    உறுப்பினர் அவையிலே பேசும்போது, 1967ல் கருணாநிதிக்கு அவர் வீட்டிற்குப் பின்னால் இருக்கிற 60க்கு 13 என்ற இடம் தேவைப்படுகிறது. அது கால்வாய் இடம். அந்த இடத்தை அவருக்கு விலைக்குக் கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டு அனுப்புங்கள் என்று மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு கடிதம் அனுப்புகிறார். உடனே சென்னை மாநகராட்சியும் அந்த இடத்தில் ரூ. 3,250 என்று அந்தக் காலத்தில் விலையை நிர்ணயம் செய்கிறது. கருணாநிதிக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அவருக்குக் கொடுக்கும்போதே அந்த நிலம் கால்வாய்ப் பகுதி என்றும், மாநகராட்சி ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்து அந்தக் கால்வாய்ப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன் அந்த இடம் அவருக்குக் கொடுக்கப் பட்டது என்று இதையெல்லாம் குற்றச்சாட்டாகக் கூறுகிறார். இது குற்றச்சாட்டா? நிலை விளக்கமா?

    அ.தி.மு.க. உறுப்பினர் பேசியதாக அவர்களுடைய கட்சி ஏட்டிலே இதுதான் வந்துள்ளது. இந்த இடத்தைத்தான் நான் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, நான் வசிப்பதற்காக அரசு ஒதுக்கிய கொடநாடு மாளிகை போன்ற பெரிய பெரிய வீடுகளுக்கெல்லாம் செல்லாமல், ஏற்கனவே நான் வாழ்ந்த சிறிய தெரு வீட்டிலேயே தங்கிய காரணத்தால், பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான அந்த இடத்தில் ஓய்வு நேரத்தில் உட்கார்ந்திருப்பதற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதைத்தான் நான் ஏதோ திட்டமிட்டு ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அந்த இடத்திலே கட்டிடம் கட்டியிருப்பதாகவும் பேரவையிலே பேசியிருக்கிறார்கள். பேரவை உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் அல்லது இப்போதே கூட நேரில் வந்து அந்த இடத்தைப் பேரவைத் தலைவர் தலைமையிலே காணலாம். நான் என்னுடைய சொந்த வீட்டையே நான் வாழும் காலத்திற்குப் பிறகு என் குடும்பத்திற்கு வேண்டாமென்று கூறி அதனை அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். ஆனால் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை நான் ஆக்கிரமித்துக் கொண்டதாக அ.தி.மு.க. வினர் குற்றம் கூறி, அதற்குரிய அமைச்சர் பேரவையிலே பதில் சொல்லியிருக்கிறார்.

    மேலும் அந்தத் துறைக்கான அமைச்சர் தனது பதில் உரையில், சென்னை மாநகராட்சியின் பழைய செட்டில்மெண்ட் பகுதிகளான சைதாப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மற்றும் தியாகராயர்நகர் போன்ற பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக அதற்கென நியமிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் சென்று பணியாற்ற தனி சந்துகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    காலப் போக்கில் திடக் கழிவு மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் இயந்திரங்களாலும் மற்றும் பாதாள சாக்கடை மூலமாகவும் அகற்றப்படும் வகையில் நவீனமயமாக்கப்பட்டதால் இச்சந்துகள் பயன்பாடின்றி சென்னை மாநகரின் பல்வேறு மண்டலங்களிலும் உள்ளன என்றுதான் தொடங்குகிறார். இதிலிருந்தே அது சந்து என்பதும், எதற்காகப் பயன்பட்டது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் அமைச்சர் தனது பதிலில் இது போன்ற சந்துகள் கோபாலபுரத்தில் இருக்கின்றன என்றும்; அதிலே ஒன்றுதான் என்னுடைய வீட்டின் பின்புறத்திலே உள்ளது என்றும் கூறியிருக்கிறார். கோபாலபுரத்தில் என் வீட்டிற்குப் பின்னால் உள்ள அந்தச் சந்து போன்ற பகுதிகளையெல்லாம் அந்தத் தெருவிலே உள்ள அனைவருமேதான் பராமரித்து வருகிறார்கள்.

    என் மீது குற்றஞ்சாட்டிய அந்த அ.தி.மு.க. உறுப்பினரையும், அமைச்சரையும் கேட்கிறேன். உங்கள் முதல்வரின் கதை என்ன? அதைப்பற்றி உங்கள் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஊர்வலமாக தலைமைச் செயலகத்திற்கே வந்து சிறுதாவூரில் தலித்களுக்காக கொடுக்கப்பட்ட இடத்தை ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று புகார் மனு கொடுத்தார்களா, இல்லையா?

    அதன் மீது விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்ரமணியம் கமிஷன் அவ்வாறு ஆக்கிரமிப்பு நடந்தது உண்மை என்று அறிக்கை கொடுத்ததா, இல்லையா? கொடநாடு விவகாரம் என்ன? சிறுதாவூரில் ஜெயலலிதாவிற்கு மிகவும் வேண்டப்பட்டவர் பெயரிலே உள்ள மாளிகை, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை வளைத்து ஆக்கிரமித்துச் சுற்றுச் சுவர் எழுப்பி கட்டப்பட்டிருக்கிறதா இல்லையா? அந்த இடங்களையெல்லாம் அந்தத் துறையின் அமைச்சர் எப்போது கைப்பற்றப் போகிறார்? பேரவையில் பதில் சொல்வாரா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.


    Posted by விழியே பேசு... at 9:27 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ▼  September (419)
      • பாலா இயக்கத்தில் அதர்வா!
      • அஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்
      • ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்த...
      • மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போ...
      • என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ர...
      • காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!
      • அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட...
      • 2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சம...
      • சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
      • போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்...
      • வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன...
      • டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள்...
      • உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வ...
      • 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்ல...
      • ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான...
      • சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா
      • அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்ல...
      • தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேல...
      • ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000...
      • நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் ப...
      • சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!
      • பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரைய...
      • ப.சிதம்பரம், பிரணாப் இடையிலான மோதல்: பிரதமரை சந்தி...
      • முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவர...
      • விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவல...
      • ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்...
      • சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்-...
      • மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்...
      • எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் ...
      • 'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமர...
      • சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்
      • இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?
      • ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட...
      • ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர்...
      • அதிமுக- இந்திய கம்யூ கூட்டணி 'டமார்': உள்ளாட்சித் ...
      • பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் வ...
      • இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர...
      • மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேய...
      • தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
      • நித்தியானந்தா - சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
      • அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்...
      • திருச்சி இடைத் தேர்தல்: விஜயகாந்த் திண்டாட்டம் ; த...
      • கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்
      • உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்
      • அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும...
      • சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த ...
      • ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்
      • தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு
      • யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம...
      • 'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'
      • ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!
      • கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ...
      • சிறையில் திமுகவினருக்கு மனித உரிமை மீறல்- ஜனாதிபதி...
      • லிபிய சிறையில் 1,270 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
      • மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒ...
      • போர்க்குற்றம்: ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ...
      • போப் ராஜினாமா செய்திக்கு வாடிகன் கடும் கண்டனம்
      • காங்கிரஸில் இருப்பதால் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார...
      • ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்...
      • ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகம...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மோதும் 'சைதை சிங்...
      • நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியு...
      • சோனா - எஸ்.பி.பி.சரண்! சமாதானம் பேச மறுத்த இசைஞானி!!
      • எங்கேயும் எப்போதும் இயக்குனருடன் இணையும் ஆர்யா
      • 3-ம் பரிசு பெற்றவருக்கு '3' படத்தில் சான்ஸ் !
      • விஜயகாந்த்துடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு- இன்று...
      • ‘ஏழாம் அறிவு’ படத்தில் உலகத்தமிழர்களுக்கு ஒரு பாடல...
      • தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; த...
      • எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெ...
      • என் 'ஏரியாவில்' திமுக அமோக வெற்றி பெறும்-மு.க.அழகிரி
      • அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!
      • சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம்
      • 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
      • திருச்சி மேற்கில் தேமுதிக நிலை என்ன??
      • ரஜினி வழியில் இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ப.சிதம்பரம் பதவி விலக தே...
      • சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்பு...
      • டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்...
      • சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;...
      • இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா
      • 2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம்...
      • நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
      • தனுஷின் 'மயக்கம் என்ன' ட்ரைலர்
      • ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: ...
      • திருப்பூரில் மினி முத்தூட் நிறுவனத்தில் 3,489 பவுன...
      • ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இரு...
      • ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?
      • 'தனியே தனந்தனியே'... தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 7...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.க...
      • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்...
      • ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் பட...
      • சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வ...
      • 7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்று...
      • இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!
      • அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியே...
      • ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!
      • 7ஆம் அறிவு ட்ரைலர்
      • ''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்...
      • சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
      • ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறி...
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.