சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (02.09.2011) சேலத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம் பலவகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
ஆரம்பம் முதலே, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை சேலம் மாவட்ட அரசியலில் கட்சியில் ஓரம் கட்டியே வந்தார்.
மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை வரவேற்க செல்லாமல் கடைசி நேரத்தில், உடல்நிலை சரியில்லை என்று கோகுலம் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டர் வீரபாண்டி ஆறுமுகம்.
இதனால், மு.க.ஸ்டாலின்தான் மருத்துவ மனைக்கு போனாரே தவிர, வீரபாண்டி ஆறுமுகம் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போகவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, சேலம் தெற்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான கிச்சிப்பாளையம் குணசேகரனுக்கு தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
குணசேகரனுக்கு சீட்டு கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கலைஞரிடம் அடம் பிடித்து, ஸ்டாலின் ஆதரவாளருக்கு சீட்டு கிடைக்காமல் செய்தார் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானார் வீரபாண்டி ஆறுமுகம்.
அதற்கு மாற்றாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பணம் கூட கட்டாத மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை இந்த தொகுதியில் போட்டியிட வைத்து, மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவை தோல்வியடைய வைத்தார்.
நில மோசடி வழக்குகளில் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி, கோவை சிறையில் இருக்கும் இந்த நிலையில் கூட்டம் நடத்தக்கூடாது என்று சிலர் அடம பிடித்தபோதும், முடியாது என்று கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மிக நெருக்கமான சகாவாக இருந்து, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஊடல் கொண்டு அவரிடமிருந்து, விலகிய பனமரத்துப்பட்டி ராஜேந்திரந்திரன் தான் இப்போது மு.க.ஸ்டாலின் அணியில் முன்னாள் நிற்பவர். அவருக்கு பின்னால், டி.எம்.செல்வகணபதி எம்.பி, முன்னாள் மேயர் சூடாமணி, முன்னாள் துணை மேயர் சுபாஷ் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
நீன்ட நாள்களாக வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகளாக இருந்த பலர், வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய அல்லக்கைகளாக இருந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சிக்கரகளை நெருங்கவிடாமல், தாங்கள் விருப்பம் போல விளையாடிய பூலாவாரி சேகர், பாரப்பட்டி சுரேஸ்குமார், கவுசிகபூபதி, மற்றும் போலிஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போன்றோரின் நடவடிக்கையால் வெறுப்புற்ற மாவட்டத்தின் பெரும்பாலான பொறுப்பாளர்கள், மற்றும் கட்சிக்காரர்கள் தற்போது சத்தமில்லாமல் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பி விட்டனர்.
அதனால், (02.09.2011) சேலம் கோட்டை மைதானம் எதிர்பார்த்ததை காட்டிலும் பலமடங்கு கூட்டம் கூடிவிட்டது. மாலை நான்கு மணி முதல் மழை விட்டு விட்டு வந்து பயம் காட்டியபோதும் ஆறு மணிக்கு கட்டுக்கடங்காது கூட்டம் கூடிவிட்டது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு ராஜேந்திரன் பேசும்போது, எங்களின் உயிருள்ளவரையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் எங்களின் “உயிர், ஸ்டாலின் அவர்கள் தான் “உயிர்மூச்சு இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
தற்போததைய சட்டமன்றம் சட்டமன்றம் போல நடக்கவில்லை சிங்கு ஜா போடும் மன்றமாகத்தான் உள்ளது. அம்மா அம்மா என்பதைத் தவிர அங்கு வேறு எந்த வார்த்தையும் கேட்டக முடிவதில்லை. என் நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்னார், ஜெயலலிதா ஏன்...? ஆடு மாடுகளை மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் தெரியுமா...? என்று கேட்டார்.
எனக்கு தெரிய வில்லை என்று சொன்னேன். அந்த விலங்குகள் எல்லாம் “அம்மா என்று மட்டும் சொல்லுவதால் தான் அதை தமிழக மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் என்று சொன்னார். தன் கட்சிகாரர்கள் மட்டுமல்ல தமிழகமே “அம்மா புராணம் பாடவேண்டியுள்ளது இந்த ஆட்சியில், என்ற செல்வகணபதி கூட்டத்தின் பலமான கைதட்டலை பெற்றார்.
வழ..வழ....வென்று பலரையும் பேச விடாமல், 7.45 மணிக்கு மு.க.ஸ்டாலின் பேசவந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வீரபாண்டியார் இல்லை, அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், இந்த நேரம், இங்கு நடத்து கொண்டிருக்கும் இந்த கூட்டம் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது நமக்கு வருத்தமானது தான். ஆனாலும் அவர் இங்குள்ள அத்துனை பேரின் உள்ளங்களிலும் நிறைந்துள்ளார்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளை கேட்கலாம், அதற்க்கு அமைச்சர் பெருமக்கள் பதில் சொல்வார்கள் இதுதான் மரபு. கேள்வி நேரத்தில் யாரும், யாரைப்பற்றியும் விமர்சிக்க கூடாது என்பது மரபு. ஆனால் இந்த சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், ஒரு அமைச்சர் நம் கட்சி உறுப்பினர் துரைமுருகனை பார்த்து இவர் பாடி லாங்வேஜில் கிண்டல் செய்கிறார் என்கிறார்.
அதற்கு இன்னொரு சட்டமன்ற உறுப்பினர் இவர் 1989ம் வருடம், நம் தலைவியை சட்டமன்றத்திலேயே அடித்து அவமானப்படுத்தியவர் என்று பேசுகிறார். இதையெல்லாம் சபாநாயகர் அணுமதிக்கிறார், எதிர்க்கட்சி தலைவரும் கண்டுகொள்வதில்லை.... எதிர்க்கட்சி என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை.
சட்டமன்றத்தில் ஒரு சம்பவம் பற்றி பேசும்போது, ஒரு கட்சியின் உறுப்பினர்கள் தாங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், தலைவர்களுடன் பெசிக்கொள்ளவும் ஒரே பகுதியில் உட்கார இடம் கொடுக்கவேண்டும் அல்லது ஒருவர் பின் ஒருவராக அமர இடம் கொடுக்கவேண்டும்.
ஆனால் இப்போது சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது. நம் கட்சி உருப்பினகளுக்கு ஆளுக்கு ஒருபக்கமாக இடம் கொடுத்துள்ளார்கள். நாங்கள் யாரு யாரோடும் பேசிக்கொள்ளமுடியாத் நிலையில் சட்டமன்றத்தில் இருக்கிறோம். சட்டமன்றத்துக்கு என்று ஒரு மரபு உள்ளது. அந்த மரபு இங்கே மீறப்படுகிறது.
ஒருமுறை எதிர்க்கட்சி வரிசையில் உறுப்பினராக இருந்த டாக்டர் ஹண்டே அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூன்றாம் தரமான ஆட்சி நடத்திக் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று பேசினார்.
அதற்கு பதிலைத்த தலைவர் கலைஞர் அவர்கள், உறுப்பினர் சொல்லுவது போல நான் மூன்றாம் தரமான ஆட்சி நடத்தவில்லை.... நான்காம் தரமான ஆட்சி நடத்திக்கொண்டுள்ளேன். ஆமாம்... பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என்கிற அடிப்படையில் நான் நான்காம் தரமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிரேன் என்றார். இப்படி நாகரீகமாக நடந்த மன்றத்தில் இப்போது என்ன நடக்கிறது.
தாங்கள் நினைத்ததை செய்து முடிக்க துடிகிறார் ஜெயலலிதா. சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது. சட்டமன்ற கூட்டம் கூட்டப்படுவதர்க்கு முன்பே, இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளீர்கள். நான்கு மாதம் முன்பு சமச்சீர் கல்வி தரமானது என்று சொல்லி பாடப்புத்தகங்களை அச்சடிக்கசொன்ன கல்வித்துறை செயலாளர் இப்போது சமச்சீர் கல்வி சரியில்லை என்று சொல்லியுள்ளார் இப்படி பல காரணங்களை சொல்லிய உச்சநீதிமன்றம் ஜெயலலிதா அரசை கண்டனம் செய்துள்ளது.
அதுபோலவே ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் இன்னும் ஒரு அடி கொடுக்கப்போகிறது... அது புதிய தலைமை செயலகத்தை தரமில்லாத்து என்று சொல்லி இழுத்து மூடிஇருப்பதற்கு.
2002 வருடம் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக வந்ததும் இப்போது இருக்கும் இந்த ஜெயின்ஜார்ஜ் கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழையது, பல இடங்களில் ஒழுகுகிறது.. அந்த ஓட்டையை சரிசெய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்கவேண்டியுள்ளது.
ஏன்... இந்த தலைமைச்செயலகத்தை சுற்றிலும் முளைக்கும் புல், பூண்டுகளை புடுங்குவதற்கு கூட நாம் மத்திய அரசிடமும், பாதுகாப்பு துறையிடமும் அனுமதி வாங்கவேண்டியுள்ளது, எனவே நாமக்கு ஒரு புதிய தலைமை செயலகம் காட்டவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் அதை தி.மு.கவும் ஆதரித்தது.
முதலில் மகாபலிபுராம் சாலையில் இடம் பார்த்தார், பின்னர் ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தான் கட்டவேண்டும் என்றார். பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூலக ஆய்வுமையம் உள்ள இடத்தில் கட்டவேண்டும் என்றார்.
அவரது ஆட்சிகாலத்தில் எந்த இடத்திலும் புதிய தலைமைச்செயலகம் கட்டவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் ஒரு பகுதியை சட்ட மன்றமாகவும் ஒருபகுதியை தலைமைச் செயலகமாகவும் காட்ட முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் முடிவடையும் நிலையில், இப்போது அந்த கட்டிடம் தரமானது இல்லை என்று விசாரணை கமிசன் போட்டுள்ளார்.
ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று என்மீது போடப்பட்ட விசாரனை கமிசன் என்ன ஆனாது என்று தெரியவில்லை. இப்போது போட்டப்பட்ட விசாரணை கமிஷனும் அப்படித்தான் இருக்கும்.
தலைமை செயலகத்தை எப்படி மருத்துவமனையாக மாற்ற முடியும். அரசு அலுவலகம் இருக்கும் அமைப்பு வேறுமாதிரியானது, நோயாளிகள் போகவும் வரவும் வசதிகள் உள்ளபடி கட்டப்படும் மருத்துவமணை கட்டமைப்பு வேறுமாதிரியானது இதிலும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போயுள்ளோம். நீதிமன்றம் விசாரணை நடத்தி ஜெயலலிதாவிற்கு சரியான பாடம் புகட்டும் என்றார் ஸ்டாலின்.
No comments:
Post a Comment