உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. சென்னை மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் மா.சுப்ரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக திமுக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் நட்டாற்றில் விடப்பட்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் பல கோஷ்டிகளாகப் பிரிந்து கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்கள், நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் குறித்து திமுக தலைமை ஆலோசனை நடத்தி வந்தது. இதையடுத்து தற்போது வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர்.
இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். முதல் பட்டியலாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மா.சுப்ரமணியம்
அதன்படி சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் மா.சுப்ரமணியமே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மேயர் பதவிக்கு செல்லப்பொன்னி மனோகரன், நெல்லைக்கு அமுதா, தூத்துக்குடிக்கு பொன் இனிதா, திருப்பூருக்கு செல்வராஜ், கோவைக்கு கார்த்திக், வேலூருக்கு ராஜேஸ்வரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, திருச்சி, சேலத்திற்குப் பின்னர்
மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார்.
86 நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
இதேபோல 86 நகராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான வேட்பாளர்களையும் கருணாநிதி அறிவித்தார்.
No comments:
Post a Comment