அரசு வக்கீல் வீட்டில் சோடா பாட்டில்களை வீசி ரகளை செய்து வன்முறையில் ஈடுபட்டதாக மதுரை துணை மேயரும், மு.க.அழகிரியின் படைத்தளபதிகளில் ஒருவருமான பி.எம்.மன்னன் மீ்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனனர். திமுக இளைஞர் அணிச் செயலாளர் ஜெயராமன் மீதும் 'கேஸ்' போடப்பட்டுள்ளது.
மதுரை பி.பி.சாவடி, பகலவன் நகரில் வசித்து வருபவர் வக்கீல் தமிழ்ச் செல்வன். இவர் மதுரை மாவட்ட கோர்ட்டில் முதன்மை அரசு வக்கீலாக இருக்கிறார். அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு இரவில் சிலர் வந்தனர். வீட்டிற்குள் சோடா பாட்டில்களை தூக்கி வீசி சத்தம் போட்டு திட்டி ரகளை செய்தனர். இதையடுத்து தமிழ்ச்செல்வனும், அவரது மனைவியும் வெளியே வந்தனர். அதைப் பார்த்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி பவுனு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற கரிமேடு போலீஸார் துணை மேயர் மன்னன், ஜெயராமன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசி திட்டுவது, சேதம் விளைவிப்பது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment