வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் மும்பையில் தங்கியிருந்து கப்பலில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமாவதி (32), தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கருணாகரன் மகன்களை சென்னையில் படிக்க வைத்தார். அதற்காக அங்கு ஒரு வீடு எடுத்து மனைவி மகன்களை தங்க வைத்தார்.
வேலூர் தென்னமரதெருவை சேர்ந்த மாலினி என்பவருடன் ஹேமாவதிக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது சென்னை கே.கே.நகரை சேர்ந்த சினிமா உதவி டைரக்டர் மகேஷ்வரன் என்பவரை மாலினி அறிமுகம் செய்து வைத்தார். சினிமா டைரக்டர் மகேஸ்வரன் அடிக்கடி ஹேமாவதியுடன் பேசிவந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அடிக்கடி சந்தித்து கொண்டனர். ஹேமாவதி அழகாக இருப்பதாகவும் சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் மகேஸ்வரன் ஆசை காட்டினார்.
நடிகை மோகத்தில் மயங்கிய ஹேமாவதி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வைப்பதற்காக பணம் தேவைப்படுவதாக மகேஸ்வரன் கூறினார். இதனால் தனது சொந்த வீட்டை விற்று பணத்தையும் தனது நகைகளையும் கழட்டி கொடுத்தார். இந்த விஷயம் கருணாகரனுக்கு தெரியவந்தது. மனைவி ஏமாற்றப் பட்டதை அறிந்த அவர் உடனே ஊருக்கு வந்தார். சென்னையில் இருந்த தனது மனைவி மகன்களை வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்க வைத்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மகன்கள் அருள் (14), அஜய்சந்தோஷ் (3), ஆகியோருடன் ஹேமாவதி மாயமானார். இதுபற்றி கருணாகரன் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மகன்களை உதவி டைரக்டர் மகேஸ்வரன் கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சினிமா டைரக்டர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து ஹேமாவதி மற்றும் அவரது மகன்களை மீட்க தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை சென்றனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
No comments:
Post a Comment