டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மே மாதமும் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. அப்போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஒத்திகையாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 2வது முறையாக குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் எந்த உளவுத் தகவலும் இல்லை.
கடந்த மே 25ம் தேதி உயர்நீதிமன்றத்தின் 7வது நுழைவாயில் பகுதியில் குண்டு வெடித்தது. அது லேசான குண்டுவெடிப்பு. அதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் இறுக்கமான பாதுகாப்பு போடப்படவில்லை.
குறிப்பாக அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால்தான் இன்றைய குண்டுவெடிப்பு குறித்த எந்தப் படமும் கிடைக்காமல் போய் விட்டது. மேலும், நுழைவாயில்களில் தீவிர கண்காணிப்பும் இல்லை.
மே 25ல் நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அது பெரிய தாக்குதலுக்கு முந்தைய ஒத்திகையாகவே போலீஸார் கருதுகிறார்கள். அந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இன்றைய பெரிய தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

No comments:
Post a Comment