தேமுதிக சார்பில் மதுரை மேயர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கவியரசு கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டலப் பொறுப்பாளருமான அழகிரியை எதிர்த்து போட்டியிட்டவர் ஆவார்.
நடிகர் விஜயகாந்தின் அதிதீவிர ரசிகரான கவியரசு, தேமுதிக ஆரம்பிக்கப்படுவதற்கு முன் கேப்டன் நற்பணி மன்றத்தின் மாவட்ட இளைஞரணிச் செயலாளராக இருந்தார். இ்ப்போது தேமுதிக நகர அவைத் தலைவராக உள்ளார்.
சாக்லெட் தயாரிப்பதற்கான மூல பொருட்களை விற்பனை செய்து வரும் இவர் மதுரையில் மிட்டாய் கம்பெனியும் வைத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதலில் முத்துலட்சுமி என்பவரை வேட்பாளராக அறிவித்துவிட்டு பின்னர் அவருக்குப் பதில் கவியரசுவை அழகிரிக்கு எதிராக நிறுத்தினார் விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் கவியரசு படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது அவரை மதுரை மேயர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளார் விஜய்காந்த். இவர் கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.
திமுக மேயர் வேட்பாளர் பாக்கியநாதன்?:
இந் நிலையில் மதுரை, திருச்சி, சேலம் தவிர்த்த மற்ற 7 மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துவிட்ட திமுக இந்த மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
மதுரை மேயர் வேட்பாளராக பாக்கியநாதனை நிறுத்தலாம் என்று அழகிரி பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
திமுக வழக்கறிஞர் அணியில் உள்ள பாக்கியநாதன், முன்னாள் மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவரது மனைவி மகேஷ்வரியும் மதுரை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர் ஆவார்.
No comments:
Post a Comment