தயாநிதி மாறன் மீ்தான புகார்களை சிபிஐ முறையாகவும் சரியாகவும் விசாரிக்கவில்லை என்று கூறியுள்ளார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன். இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
தயாநிதி மாறன் மீ்து ஏர்செல் முன்னாள் நிறுவனர் சிவசங்கரன் கூறிய புகார்கள் மற்றும் அவரை தயாநிதி மாறன் மிரட்டியதாக கூறப்பட்ட புகார்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரம் இல்லை என்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், சிபிஐ கூறியிருந்தது.
தை எதிர்த்து பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தயாநிதி மாறனின் பங்கை முற்றிலும் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது சிபிஐ. மேலும் இதுதொடர்பான உணமைகளையும் அது புறம் தள்ளியுள்ளது.
மேலும் தயாநிதி மாறன் மீதான புகார்களையும், அதுதொடர்பான தகவல்களையும் சிபிஐ சரிவர விசாரிக்கவில்லை. முறையாக விசாரிக்கவில்லை என்று கூறியுள்ளார் பூஷன்.
இதற்கிடையே, தயாநிதி மாறன் நிரபராதி என்று சிபிஐ ஒருபோதும் சொல்லவில்லை. அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட, இந்த வழக்கை சிபிஐ இன்னும் கைவிட்டு விடவில்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment