திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29-ந் தேதி தில்லைநகரில் மர்ம ஆசாமிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்று வீசிய கூலிப்படையையும், ஏவிய முக்கிய பிரமுகரையும் தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கே.என். நேருவுக்கு போன் மூலம் சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் இன்று 3 பேரை கைது செய்தனர். இதில் தனிப்படை போலீசார் நடத்தியவிசாரணையில், சங்கரன்கோயில், விருதுநகரைச்சேர்ந்த கந்தசாமி, சண்முகம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மதுரையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment