கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும் என பிரதமருக்கு சர்வதேச மன்னிப்பு கழகம் கோரிக்கை விடுத்து கடிதம் செய்யும் எழுதியுள்ளது.
மக்கள் தங்கள் உணர்வுகளை தெரிவிக்க சர்வதேச சட்டப்படி உரிமையுள்ளது எனவும் போராட்டக்காரர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் எனவும், உடனடியாக அவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்த கோரியும் கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கடிதத்தில் போராட்டக்குழு எழுப்பிய பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்ற உடைய குமாரின் குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ள அக்கடிதத்தில் உதயகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போராட்டக்காரர்களை ஒடுக்க நினைக்கிறது எனவும் ஆனால் போராட்டம் அமைதி வழியில் நடந்து வருவதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் நகல் போரட்ட குழுவிற்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இக்கடிதத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பீட்டர் கேட்டன் உள்பட சர்வதேச மன்னிப்பு கழக உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment