காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் ஒரு தீவிரவாதி என்று மத்திய பிரதேச சபாநாயகர் ஈஸ்வர்தாஸ் ரோஹிணி கூறியுள்ளார்.
ஜபல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஈஸ்வர், ’பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் பேசியுள்ளார். மேலும், அல்மார்க்கில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் வீடுகளுக்கு அவர் சென்றுள்ளார். அவர்களுடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்த மாநிலத்தில் யார் தீவிரவாதி என்று கேட்டால், அவர் திக்விஜய்சிங் தான் என்று நான் கூறுவேன்’ என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில், ’சபாநாயகர் ஈஸ்வர் அவருடைய பதவியின் கண்ணியம், பொறுப்புக்கு ஏற்றார் போல் பேசாமல் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளார். எனக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்குத் தான் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது. அப்துல் ரசாக் என்ற ஜமைத்-அல்-இ-ஹதீஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிக்கு ஈஸ்வர் தான் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க வேண்டும்’ என்றார்.
தப்பு சபாநாயகரே...அந்த ஆளு தீவிரவாதி இல்ல...லூசு...
ReplyDelete