அடுத்த குடியரசுத்தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் கட்சி தனது கூட்டனி கட்சிகளிடமும் அதரவு திரட்டி வருகிறது. இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிறப்பு துதுவர் ஒருவரை கருணாநிதியை சந்திக்க அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமித் அன்சாரியை அடுத்த குடியரசுத்தலைவராக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவு திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, துணை குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி குடியரசு தலைவராவதற்கு லாலு பிரசாத் தன் ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனால் சமாஜ்வாடி கட்சி இத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
சமாஜ்வாடி கட்சியும் மம்தா பானர்ஜி கட்சியும் இணைந்தால் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மேலும் ஏ.ஐ.ஏ.டி.எம்.கே., பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய பிராந்திய கட்சிகளும் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்பதும் குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment