அன்னா ஹசாரே குழு ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. முன்னதாக இக்குழு தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், வாக்காளர்களிடம் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பிரச்சாரம் மட்டுமே மேற்கொள்ளும் எனத்தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்துவருவதாக அன்ன ஹசாரே குழுவில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
பல மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளதாகவும், எவ்வளவு மக்கள் தங்களை தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவிப்பார்கள் என தெரியவில்லை எனவும், மக்கள் விரும்பும் பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என மற்றொரு உறுப்பினர் டாக்டர் விஸ்வாஸ் குமார் தெரிவித்தார்.
இருந்தாலும் இது குறித்து பின்னர் கூடும் குழு குட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். இதில் பெரும் கருத்து வேறுபாடுகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, வரும் ஜூன் 3-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் பேரணி குறித்து அன்னா ஹசாரே குழுவினர் நொய்டாவில் ஆலோசனை நடத்தினர். இதில் பங்குபெற்ற குழு உறுப்பினரான முப்தி சமீம் கஸ்மி முறைகேடாக கூட்ட நிகழ்ச்சியை தன்னுடைய மொபைலில் பதிவு செய்ததாக அவரை ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு அன்னா ஹசாரே குழுவினர் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறிய கஸ்மி, அன்னா ஹசாரே குழுவில் இருந்து நீங்குவதாகவும், இந்த அமைப்பு முஸ்லீம் மக்களுக்கு எதிரான அமைப்பு என்றும் குற்றம் சாட்டினார் என்பது குறிபிடத்தக்கது.
அன்னாவும் அவரது குழுவினரும் சுயநலமின்றி மக்களுக்காகவே ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதாக மக்கள் கருதியதால் தான் இவர்களின் போராட்டங்களுக்கு தேசம் முழுவதும் ஆதரவாக அலை வீசியது. ஆனால் இவர்கள் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதில் இருந்து இவர்களின் போராட்டங்களும், இவர்களின் நேர்மையும் கேள்விக்குரியதாகி இருக்கிறது....
மொத்தத்தில் இவர்களின் போராட்டங்களும் ஒரு நாடகமே...! இவர்களும் ஒரு கைதேர்ந்த நடிகர்களே...!
No comments:
Post a Comment