காங்கிரஸ் ஆதரவுடன், அக்கட்சி கொடுத்த நெருக்கடிக்குப் பணிந்து ராஜ்யசபா எம்.பியாகி விட்டார் சச்சின். இனி அவர் கருப்புப் பணம், ஊழல் பிரச்சினை குறித்தெல்லாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பேசுவாரா என்று பாபா ராம்தேவ் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கிரிக்கெட் உலகில் தலைசிறந்து விளங்கும் சச்சின் டெண்டுல்கர், நியமன உறுப்பினர் ஆக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அவர் விளையாட்டு தவிர ஊழல் பிரச்னை, கறுப்புப் பணம் ஆகிய விவகாரங்களை எழுப்புவாரா என்ற கேள்வியை அவரிடம் கேட்கத் தோன்றுகிறது.
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதன் மூலம் மீட்க முடியும் என்றால் அனைத்து வீரர்கள், பிரபலங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் விளைவுகளை சச்சின் டெண்டுல்கர் நன்றாகவே உணர்ந்திருப்பார்.
ஆனாலும் அவருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் முடிவைத் திணித்துள்ளனர். அதற்கு அவர் பணிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment